india

img

அரபு நாடுகளில் 3.5 மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றனர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 3.5 மில்லியன் இந்தியர்கள் வாழ்வதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் 1.3 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளதாகவும் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் 3.419 மில்லியனாக இருந்த அரபு நாட்டில் தற்போது 3.554 மில்லியன் இந்தியர்கள் வசிப்பதாகக் கூறினார்.

இந்தியாவிலிருந்து வேலை தேடி ஏராளமானோர் அரபு நாட்டில் குடிபெயர்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் மட்டும் மொத்தம் 7.93 மில்லியன் இந்தியத் திறமையாளர்களை வளைகுடா நாடு தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

துபாய், ரியாத், ஜித்தா மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் இந்திய அரசு, வெளிநாட்டு இந்திய மையங்களை நிறுவியுள்ளது, இது பெருகிய முறையில் குடிபெயரும் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று கூறினார்.